Tamil Audio Books
11. பருத்திப் பூ| Paruthi Pou வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து| ஆசிரியர் அ. முத்துலிங்கம்.
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:31:03
- Mas informaciones
Informações:
Sinopsis
#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----"என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும் அடர்ந்த காடுகளாலும், நீர்த்தேக்கங்களாலும் சூழப்பட்டு கவலைதரும் நெருக்கத்திலிருக்கிறது. இப்படியான நாட்டில் பெய்யும் மழையில் ஒரு துளியேனும் ஆற்றின் வழியேகி மனிதனுக்கு பயன்தராத வகையில் சமுத்திரத்தை அடைவது மகாபாபமாகும்." - இலங்கை அரசன் பராக்கிரமபாகு (கி.பி.1153-1186) சூளவம்சம்: அதிகாரம் LXVIII, செய்யுள் II. அவருடைய நித்திரை திடீரென்று கலைந்தது. குழாயிலிருந்து தண்ர் சொட்டும் சத்தம் நிதர்சனமாகக் கேட்டது. தண்ர்க் குழாயைத் திறந்தால் வடிவாகப் பூட்டும்படி ஆயிரம் தடவை சொல்லியிருப்பார் யார் கேட்கிறார்கள்? அவர் ஆழ்ந்த நித்திரையாக இருக்கும்போது 'புக்காறா' விமானத்திலிருந்து குண்டு விழுந்தாலும் அவருக்க கேட்காது ஆனால் ஒரு சொட்டு தண்ர் அநாதையாக விழும் சத்தத்தை மாத்திரம் அவரால் தாங்கமுடியாது. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் இதுதான் பெரிய ஆச்சரியம். Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/