Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 61:30:50
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • ஆஸ்திரேலியர்களிடையே பிரபலமான விமானச் சேவை எது தெரியுமா?

    12/07/2024 Duración: 02min

    அறுபத்திரண்டு சர்வதேச விமான நிறுவனங்களில், பயணிகளிடையே முதல் பத்து பிரபலமான விமான நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    12/07/2024 Duración: 08min

    முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து மேலும் உடல்கள் மீட்பு . இரா சம்பந்தனின் மறைவுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு. ஊதிய அதிகரிப்பிற்கு எதிரான நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • ரஷ்ய குண்டு வீச்சு தொடர்கிறது, யுக்ரேனுக்கு கூடுதல் ஆதரவை அறிவித்தது அரசு

    12/07/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/07/2024) செய்தி.

  • நா முத்துகுமார்: நினைவில் வாழும் கவிஞர்!

    12/07/2024 Duración: 13min

    காலம் வெல்ல முடியாத கவிதைகளை தமிழுக்கு விட்டுச் சென்றிருப்பவர் கவிஞர் நா முத்துகுமார். நா.முத்துக்குமாரின் பிறந்த நாள் 12 ஜூலை – வெள்ளி கொண்டாடப்படுகிறது. உயிருடன் வாழ்ந்திருந்தால் ஐம்பதாவது வயதில் காலடி எடுத்துவைத்திருக்கும் கவிஞர் முத்துக்குமாரை நினைவுகூரும் வகையில் அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். நா.முத்துக்குமார் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியவர் நமது அன்றைய தமிழக செய்தியாளர் R.நாகப்பன் அவர்கள்.

  • பணமோசடி - சொத்து முகவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்களுக்கு அரசு குறி

    11/07/2024 Duración: 09min

    நாட்டிற்குள் ஊடுருவி வரும் சட்டவிரோத நிதிகளைத் தடுக்க, ஆஸ்திரேலியாவின் பணமோசடி தொடர்பிலான சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் Attorney-General Mark Dreyfus எச்சரித்துள்ளார். பணமோசடி தடுப்பு நடவடிக்கையில் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் ஆகிய மூன்று தொழில்களும் அரசினால் குறிவைக்கப்படுகின்றன. Money laundering அல்லது பண மோசடி என்றால் என்ன? நாட்டில் வீட்டு விலை அதிகரிப்பிற்குப் பண மோசடியும் ஒரு காரணமா? பணமோசடி தொடர்பில் ஏன் குறிப்பிட்ட தொழில்கள் அரசினால் குறிவைக்கப்படுகின்றன? இச்செய்தியின் பின்னணியினை விளக்குகிறார் சிட்னியில் நிதி தொடர்பிலான உயர் பதவி வகித்துவரும் ரவி பானுதேவன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Green light for rail link to Melbourne Airport - வருகிறது மெல்பன் ஏர்போர்ட் ரயில்! பின்னணியும், எதிர்பார்ப்பும்!

    11/07/2024 Duración: 10min

    A rail link between Melbourne and Melbourne Airport has been discussed for years but has yet to come to fruition. However, the Victorian state government has now announced that the plan will go ahead. Professor Shan Shanmugananthakumar, a senior structural and innovation engineer at Swinburne University in Melbourne, explains the history, feasibility, and expectations. Produced by RaySel. - மெல்பன் நகரையும் மெல்பன் விமான நிலையத்தையும் இணைக்கும் ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும் அது இதுவரை கைகூடவில்லை. ஆனால் இப்போது அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று விக்டோரிய மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து விளக்குகிறார் பொறியியல் துறையில் விருதுகள் வென்ற Swinburne பல்கலைக் கழக பேராசிரியர் சண்குமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • Journey to Mars: Exploring the unknown without leaving Earth - செவ்வாய்க்கிரகம் சென்றனர் ஆனால் பூமியை விட்டுவெளியேறவில்லை!

    11/07/2024 Duración: 08min

    Four American astronauts have been to Mars and returned, but they never left the Earth. This news is being talked about with excitement. R. Sathyanathan, who has been working in the media for many years, explains this scientific information. Produced by RaySel. - அமெரிக்காவில் நான்கு விண்வெளி வீரர்கள் செவ்வாய்க்கிரகம் சென்று திரும்பியிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் பூமியை விட்டு அகலவே இல்லை – இப்படி புதுமையான செய்தி பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த அறிவியல் தகவலை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • மற்றுமொரு புகலிடப் படகு ஒன்று வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது!

    11/07/2024 Duración: 02min

    ஜூன் மாதம் Indonesia ஜாவாவில் இருந்து ஆஸ்திரேலியா வந்தடைய முயன்ற 44 பேர் கொண்ட புகலிடக்கோரிக்காளர்கள் என நம்பப்படுபவர்களை ABF ஆஸ்திரேலிய எல்லைப் படை திருப்பி அனுப்பியுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • ஒருவர் எளிதாக வாங்கும் Supplement மருந்துகள் பாதுகாப்பானதா?

    11/07/2024 Duración: 09min

    ஆஸ்திரேலியாவில் மருந்துகளை அனுமதிக்கும் அல்லது நெறிப்படுத்தும் Therapeutic Goods Administration – TGA – தற்போது மருத்துவரின் சீட்டு இல்லாமல் நாம் எளிதாக Pharmacy எனப்படும் மருந்து கடையிலிருந்து வாங்கும் ArmaForce எனும் supplement மருந்து உடலுக்கு நல்லதுதானா என்ற விசாரணையில் இறங்கியுள்ளது. குளிர் காலத்தில் “immunity” எனப்படும் நோய் தடுப்பு சக்தியை உடலில் அதிகரிக்க வைக்கும் மாற்று மருந்துகளை மக்கள் அதிகம் உட்கொள்கின்றனர். இந்த பின்னணியில், supplement அல்லது மாற்று மருந்துகள் குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் Civic Park Medical Centre, Pendlehill ஐ சார்ந்த குடும்ப மருத்துவர் Dr பரண் சிதம்பரகுமார் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • கதகதப்பு முக்கியம் – அதைவிட முக்கியம் பாதுகாப்பு!

    11/07/2024 Duración: 08min

    நாடு முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் அல்லது குளிர் அதிகரித்து வருவதால் உங்கள் வீட்டை நீங்கள் சூடாக வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த குளிர் காலத்தில் பல வீடுகள் தீக்கு இரையாகியதும், தீ விபத்துகள் ஏற்பட்டதும், கார்பன் மோனாக்சைடினால் பலர் பாதிக்கப்பட்டதும் நடந்துகொண்டிருப்பதால் – தேவை – எச்சரிக்கை. ஆங்கில மூலம் SBS-Newsக்காக Abbie O’Brien. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.

  • Why should we celebrate NAIDOC Week? - NAIDOC வாரத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

    11/07/2024 Duración: 10min

    NAIDOC Week is celebrated every year with an aim to make everyone aware of the culture and the ancient history of the First Nations people in Australia. - பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் தொன்மையான வரலாற்றையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் NAIDOC வாரம் ஒரு சிறப்பான தலைப்பை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

  • NATO - உலகின் மிகப்பெரிய ராணுவக்கூட்டமைப்பின் 75 ஆவது மாநாடு துவங்கியது!

    11/07/2024 Duración: 05min

    செய்திகள்: 11 ஜூலை 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • Professor Vithiananthan: “Apart from his contribution to Tamil, he was a wonderful parent!” - பேராரிசிரியர் வித்தியானந்தன்: “தமிழையும் தமிழ்க் கலைகளையும் வளர்த்த தாயுமானவர்!”

    10/07/2024 Duración: 13min

    Professor Su. Vithiananthan was a great educator, researcher and Tamil scholar from Sri Lanka. He was the Head of the Tamil Department at the University of Peradeniya and later the Vice-Chancellor of the University of Jaffna. His birth centenary (May 8, 1924) was celebrated recently by his students and Tamil activists - பேராரிசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் ஈழத்தின் ஒரு சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். 1924ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி பிறந்த அவரது நூற்றாண்டு நிறைவை அவரது மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.

  • காலத்துளி: Ernest Edward "Weary" Dunlop

    10/07/2024 Duración: 03min

    காலத்துளி நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப் போரில், போர்க்கைதியாக இருந்தாலும் மற்றைய போர்ககைதிகளைப் பாதுகாத்த, ஆஸ்திரேலிய மருத்துவர் Ernest Edward "Weary" Dunlop குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • தமிழக பேசு பொருள்: ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை & விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

    10/07/2024 Duración: 09min

    தமிழ்நாட்டில் நடந்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரின் படுகொலை, மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த விரிவான பார்வைகள். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • மூன்று குழந்தைகள் மரணம், தந்தைதான் காரணம். நடந்தது என்ன?

    10/07/2024 Duración: 08min

    சிட்னி புற நகர் Lalor Park என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் மூன்று குழந்தைகள் பலியானார்கள். அந்த மூன்று குழந்தைகளையும் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர்களின் தந்தை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

  • இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் நாட்டவர்களுக்கு வேலை மற்றும் விடுமுறை விசா lottery திட்டம்

    09/07/2024 Duración: 01min

    ஜூலை 1 முதல், ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் விடுமுறையை மேற்கொள்ள விரும்பும் சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை மற்றும் விடுமுறை விசா lottery முறை ஆரம்பம். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • ரஷ்யாவில் பிரதமர் மோடி, அதிபர் புட்டினுடன் பல மணிநேரப் பேச்சு

    09/07/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை10/07/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • NSW-இல் L-plate பெறுவதற்கான தேர்வை இணையவழி எழுதலாம்

    09/07/2024 Duración: 02min

    NSW-இல் L-plate ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வை வீட்டிலிருந்தபடியே இணையத்தில் எழுதலாம். இந்த நடைமுறை நேற்று முதல் ஆரம்பமாகிவுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • ஜூலை பிறந்தவுடனே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாமா?

    09/07/2024 Duración: 02min

    ஜூலை மாதம் பிறந்தவுடன் அவசர அவசரமாக வருமான வரிக் கணக்கை ஏன் தாக்கல் செய்யக் கூடாது? அதனால் வரும் பாதிப்புகள் என்ன? இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

página 17 de 25