Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
வாரத்தில் 4 நாள் வேலை: ஆஸ்திரேலியர்களுக்கு விரைவில் சாத்தியமாகலாம்
22/07/2025 Duración: 02minஆஸ்திரேலியர்களுக்கு குறைந்த வேலை நாட்கள் மற்றும் கூடுதல் விடுமுறைகளை வலியுறுத்தும் புதிய முயற்சியை சில தொழிற்சங்கங்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்: காசா போரை முடிவுக்குக் கொண்டுவர பன்னாட்டு அழைப்பு
22/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
டாஸ்மேனிய மாநில தேர்தல்: யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்?
21/07/2025 Duración: 07minTasmania மாநிலத்தின் Premier Jeremy Rockliff மீது ஜூன் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் அறுதியாக எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை என்று, இதுவரை வெளிவந்த முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
நாளைய நாடாளுமன்ற அமர்வில் முதல்முறையாக பங்கேற்கும் 40 புதிய உறுப்பினர்கள்!
21/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
தனி நாடு கோரும் New Caledonia வுக்கு புதிய அதிகாரங்களை பிரான்ஸ் தருவதன் பின்னணி என்ன?
21/07/2025 Duración: 11minசுதந்திர நாடாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்த New Caledonia பிராந்தியத்திற்கு புதிய அதிகாரங்களை வழங்கப்போவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் New Caledoniaயின் வரலாற்றையும், அது எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
20/07/2025 Duración: 09minநில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி; புதிய சர்ச்சையில் சீமான் - பெண்களை இழிவாக பேசி வருவதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புகார்; காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு - வலுக்கும் கண்டனங்கள்; - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
19/07/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (13 – 19 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 19 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
வருமான வரம்பு உயர்த்தப்படுவதால் Centrelink சலுகைபெற பலர் தகுதிபெறுவர்!
18/07/2025 Duración: 03minஆஸ்திரேலியாவில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான சொத்து மற்றும் வருமான வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேலின் தாக்குதலில் மூன்று பேர் மரணம்
18/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 18/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
What is a Justice of the Peace? When do you need one? - உங்கள் ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு JP ஒருவரைக் கண்டுபிடிப்பது எப்படி?
18/07/2025 Duración: 09minAt some stage you will probably need help from a Justice of the Peace. It may be to prove your identity, to make an insurance claim or to certify copies of your legal documents in your language. JPs are trained volunteers who play a crucial role in the community by helping maintain the integrity of our legal system. So what exactly does a JP do and where can we find one when we need their services? - ஆஸ்திரேலியாவில் ஒரு Justice of the Peace- JPயின் பணிகள் எவை? உங்களுக்கு அவர்களின் சேவைகள் தேவைப்படும்போது ஒருவரை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
Debit & credit cardக்கு நம்மிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய RBA நடவடிக்கை!
18/07/2025 Duración: 08minஆஸ்திரேலியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிமாற்றங்களுக்கு வணிகர்கள் விதிக்கும் surcharge கூடுதல் கட்டணங்களை நீக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி RBA சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
Debit & credit cardக்கு நம்மிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய RBA நடவடிக்கை!
18/07/2025 Duración: 08minஆஸ்திரேலியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிமாற்றங்களுக்கு வணிகர்கள் விதிக்கும் surcharge கூடுதல் கட்டணங்களை நீக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி RBA சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
எச்சரிக்கை! நீரிழிவு நோயை குறைத்து மதிப்பிடாதீர்கள்
18/07/2025 Duración: 10minஆஸ்திரேலியாவில் தேசிய நீரிழிவு நோய் வாரம் (ஜூலை 13 - 19) கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் சிற்றம்பலம் ராகவன் அவர்களின் கருத்துக்களையும், பரமேஸ்வரன் முத்துத்தம்பி அவர்களின் அனுபவத்தையும் கேட்கலாம். நிகழ்ச்சியாக்கம்: செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
18/07/2025 Duración: 08minஇலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரசு கையகப்படுத்திய காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்; செம்மணி மாத்திரமல்ல நடந்த ஒவ்வொரு சம்பவமும் சரியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருப்பது; பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
17/07/2025 Duración: 08minஇலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரசு கையகப்படுத்திய காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்; செம்மணி மாத்திரமல்ல நடந்த ஒவ்வொரு சம்பவமும் சரியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருப்பது; பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
17/07/2025 Duración: 07minசிரியாவில் மீண்டும் ஆயுத மோதல்; ஈராக்கில் தீ விபத்து; காசா போர்; உக்ரைன் - ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்; இந்தியா- சீனா இடையே சுமூக உறவு?; ஈரானிலிருந்து ஆப்கான் அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
பிரிட்டனில் மரத்தை வெட்டிய இருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை!
17/07/2025 Duración: 02minபிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற Sycamore Gap மரத்தை வெட்டியதற்காக இரண்டு பேருக்கு தலா நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் தமிழ்நாட்டின் முத்துலட்சுமி!
17/07/2025 Duración: 05minஇந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், தேவதாசி முறையை ஒழித்தவரும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவரும், சமூகப் போராளியுமான முத்துலட்சுமி அம்மையார் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சி. முன்வைக்கிறார்: றைசெல்.
-
முதல் முறையாக மலேசியாவில் சிறுவர் பாடல்கள் இறு வெட்டு
17/07/2025 Duración: 12minநாம் வளரும் போது, சிறுவர் பாடல்கள் பாடியிருக்கிறோம். அதில் எத்தனை தமிழில் இருந்தன? ஒரு மலேசிய இளம் இசைக்குழு அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான சிறுவர் பாடல்கள் அடங்கிய இறு வெட்டை 2013ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தது. இந்த இறுவெட்டின் தயாரிப்பின் மூலகர்த்தா காயத்திரி வடிவேல் அவர்களுடனும் அந்த இறுவெட்டில் பாடியிருந்த ஒரு சிறுவர், விஷ்ணுவுடனும் குலசேகரம் சஞ்சயன் 2014ஆம் ஆண்டில் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
-
ஒரு கோடிக்கும் அதிகமான புகைபிடி சாதனம் Vapesகளை அரசு பறிமுதல் செய்துள்ளது
17/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 17/07/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.