Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இஸ்ரேல்-ஈரான் மோதல் - பொறுமை இழந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்!
17/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
This rural town has grown into a thriving multicultural hub - SBS Examines : பன்முக பாரம்பரிய மையமாக உருவெடுத்து வரும் Dubbo
17/06/2025 Duración: 08minIn the central west of New South Wales, Dubbo is home to some of the largest Nepali and Indian communities in the state. - இந்த வருடம், SBS தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பெருமைமிக்க பன்முக கலாச்சார சமூகங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
-
விசா ரத்து மற்றும் நாடுகடத்தல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு: பிந்திய தகவல்கள்
17/06/2025 Duración: 02minஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளும் ஒரு நபர் அதற்கெதிராக தாக்கல்செய்த வழக்கு விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் முதல்தடவையாக பேசும் அஞ்சல் பெட்டிகளை நிறுவியுள்ள AusPost
17/06/2025 Duración: 02minAustralia Post முதன்முறையாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பேசும் அஞ்சல் பெட்டிகளை நிறுவியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இஸ்ரேல்-ஈரான் மோதல் G7 உச்சி மாநாட்டில் ஆதிக்கம் செலுத்தும்
17/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
Fast-Track முறையின்கீழ் பரிசீலிக்கப்பட்டவர்களும், அமைச்சரின் தலையீட்டுக்கான விண்ணப்பமும்!
16/06/2025 Duración: 13minவிசா நிராகரிக்கப்பட்டவர்கள் Ministerial Intervention எனப்படும் அமைச்சரின் தலையீட்டைக் கோரி விண்ணப்பிப்பது தொடர்பில் கேள்விப்பட்டிருப்போம். அதுகுறித்த விரிவான தகவல்களை வழங்குகிறார் மெல்பனைச் சேர்ந்த சட்டத்தரணி மரியம் நளிமுடீன் அவர்கள். அவருடனான நேர்காணலின் இரண்டாவது பாகம் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விசா நிராகரிக்கப்பட்டவர்கள் அமைச்சரின் தலையீட்டைக் கோரும்போது கவனிக்க வேண்டியவை!
16/06/2025 Duración: 13minவிசா நிராகரிக்கப்பட்டவர்கள் Ministerial Intervention எனப்படும் அமைச்சரின் தலையீட்டைக் கோரி விண்ணப்பிப்பது தொடர்பில் கேள்விப்பட்டிருப்போம். அதுகுறித்த விரிவான தகவல்களை வழங்குகிறார் மெல்பனைச் சேர்ந்த சட்டத்தரணி மரியம் நளிமுடீன் அவர்கள். அவருடனான நேர்காணலின் முதல் பாகம் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரும் கொள்கை என்ன? ஆரோக்கியராஜின் அனுபவம் என்ன?
16/06/2025 Duración: 11minஅகதிகள் வாரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 21ஆம் தேதி வரை இந்த ஆண்டு கடைப் பிடிக்கப்படும் அகதிகள் வாரத்திற்கான கருப்பொருள் சுதந்திரத்தைக் கண்டறிதல் என்று பொருள்பட, Finding Freedom என்பதாகும். ஆஸ்திரேலியாவில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களின் நிலை குறித்து, ஆரோக்கியராஜ் மரியதாஸ் குரூஸ் அவர்களின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
16/06/2025 Duración: 09minஇந்திய விமான விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 279 ஆக உயர்வு - விபத்துக்கான காரணம் என்ன?; பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்; பாஜக கூட்டணியை சிதைக்க பார்ப்பதாக பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
Air India விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 279 ஆக உயர்வு
16/06/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
தொடரும் இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள்: பின்னணி என்ன?
16/06/2025 Duración: 06minஇஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான வான்வழித் தாக்குதல்கள் தீவிரம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
உலகில் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது?
15/06/2025 Duración: 02minஉலகின் பாதுகாப்பான விமான சேவைகள் குறித்த புதிய தரவரிசைப் பட்டியலில் Qantas முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
100 மில்லியன் டொலர்கள் Powerball பரிசுத் தொகைக்கு சொந்தக்காரர் நீங்களா?
14/06/2025 Duración: 02minஇந்த ஆண்டின் மிகப்பெரிய Powerball சீட்டிழுப்பில் $100 மில்லியன் வென்ற ஆஸ்திரேலியர் யாரென்பது இன்னமும் தெரியவரவில்லை.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
14/06/2025 Duración: 04minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (08 –14 ஜூன் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 14 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையின் கைதுமுயற்சியின்போது உணர்விழந்த இந்தியர் மரணம்!
13/06/2025 Duración: 02minதெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்டில் காவல்துறையினரின் கைது முயற்சியின்போது சுயநினைவை இழந்த இந்தியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழனிடம் தோற்றுப்போன துடுப்பாட்டத் தலைவன் Don Bradman
13/06/2025 Duración: 04minகாலத்துளி நிகழ்ச்சியில் 1948ம் ஆண்டு, ஜூன் மாதம் 12ம் நாள், Trent Bridge இல் நடைபெற்ற Test Cricket போட்டியில் Donald Bradman, 138 ஓட்டங்களைப் பெற்றது குறித்தும், துடுப்பாட்டத் தலைவன் Don Bradman தமிழனிடம் தோற்றுப்போனது எப்படி என்ற வெளியே தெரியாத தரவுகளுடன் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
Air India விமான விபத்து: 265 பேர் பலி, இதுவரை வெளியான தகவல்கள்!
13/06/2025 Duración: 06minஇந்தியாவிலிருந்து லண்டன் சென்ற Air India விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 265 பேர் பலியாகியுள்ளனர். இவ்விபத்து குறித்து இதுவரை வெளியான தகவல்களின் தொகுப்பை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
13/06/2025 Duración: 08minஇலங்கையில் ஆட்கடத்தலை தடுக்கும் இலங்கை- ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி; மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள யாழ். திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரி தொடரும் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Air India விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்
13/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
12/06/2025 Duración: 09minஈராக்கிலிருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற அறிவுறுத்தல்; முடிவுக்கு வந்த அமெரிக்கா- சீனா வர்த்தக மோதல்; தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பதற்றம்; உலகெங்கும் 123 மில்லியன் மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர்; இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கோர விபத்து உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.