Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
ஈரான் மீதான தாக்குதலுக்கு Northern Territoryயிலுள்ள செய்மதி தளம் உதவியதா?- கிரீன்ஸ் கட்சி கேள்வி
23/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
மிகவும் அதிக சம்பளம் பெறும் ஆஸ்திரேலிய CEOக்கள் இவர்கள்தான்!
21/06/2025 Duración: 02minஆஸ்திரேலியாவின் ASX-பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் CEO - தலைமை நிர்வாக அதிகாரிகளின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
21/06/2025 Duración: 07minஈரான் - இஸ்ரேல் போர்; காசா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள்; ஜி 7 உச்சி மாநாடு நிறைவு; Latam GPT எனும் லத்தீன் அமெரிக்க ஏஐ; ஆப்பிரிக்க நாடுகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ள சீனா; மேற்கு ஆப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஜிகாதி குழு; நைஜீரியா மேய்ப்பர்கள்- விவசாயிகள் மோதல்; கென்யாவில் வன்முறை உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
20/06/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (15 –21 ஜூன் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 21 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
How do Australia's new laws help prevent and respond to hate speech? - SBS Examines : வெறுப்புப் பேச்சைத் தடுக்க ஆஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் எவ்வாறு உதவுகின்றன?
20/06/2025 Duración: 06minAccording to the United Nations, governments around the world are struggling to counter hate speech. - 2019 ஆம் ஆண்டில், வெறுப்புப் பேச்சுக்கான உத்தி மற்றும் செயல் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்தியது.
-
வசதியாக ஓய்வு பெறுவதற்கு எவ்வளவு Superannuation தேவை?
20/06/2025 Duración: 08minஆஸ்திரேலியாவில் நடுத்தர வருமானம் ஈட்டும் 30 வயதுடைய ஒருவர், வசதியாக ஓய்வு பெறுவதற்கு போதுமான நிலையான சூப்பர் சேமிப்புடன் ஓய்வு பெற முடியும் என ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள் சங்கத்தின் சமீபத்திய மிதிப்பாய்வு கூறுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
20/06/2025 Duración: 07minஇலங்கையின் வடக்கு கிழக்கிலுள்ள மனித புதைகுழிகள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை; வளர்ச்சி பெற்று வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை; 35 ஆண்டுகளுக்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த பலாலி அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
‘உலகின் வடிவத்தையே நாம் மாற்றுகிறோம்' - இஸ்ரேலிய பிரதமர்
20/06/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/06/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
யோகாவின் பின்னணியில் உள்ள தத்துவம் என்ன? கற்பதால் பலன் என்ன?
19/06/2025 Duración: 16minசர்வதேச யோகா தினம் சனிக்கிழமை (21 ஜூன்) கொண்டாடப்படும் நிலையில் யோகா குறித்து உரையாடுகிறார் யோகா கலையை கற்றுகொடுக்கும் ஆசிரியரான அனந்தநடராஜா பகீரதன் அவர்கள். ஆஸ்திரேலியாவின் கட்டிடக்கலைத் துறையில் 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட பகீரதரன் அவர்கள் யோகா கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
ஏன் பலரும் மருத்துவ Specialistகளை பார்ப்பதை தள்ளிப்போடுகின்றனர்?
19/06/2025 Duración: 11minஆஸ்திரேலியாவில் ஒருவர் மருத்துவத் துறையில் நிபுணர் ஒருவரை – Specialist ஒருவரை பார்க்க விரும்பினாலும் அதை பலர் தாமதப்படுத்துகின்றனர். அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஒரு ஆய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
சம்மதம் பெறாமல் செக்ஸ் வைத்தால் என்ன சிக்கல் வரலாம்?
19/06/2025 Duración: 11minபாலியல் உறவில் ஈடுபட அனுமதிப்பது அல்லது முடிவு செய்வது அல்லது sexual consent வழங்குவது – ஒருவரின் அடிப்படை உரிமை என்று பார்க்கப்படும் நிலையில், சம்மதமின்றி உறவில் ஈடுபடுவது ஏற்படுத்தும் சிக்கல்களை விளக்குகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றும் Dr.விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்லலாமா?
19/06/2025 Duración: 11minகுழந்தைகளையோ, சிறுவர்களையோ வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாமா? இது குறித்து தமிழர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்ற அவர்களது கருத்துகளுடன், ஆஸ்திரேலிய சட்டம் என்ன சொல்கிறது என்று சட்ட வல்லுநர் ஒருவருடைய கருத்துகளுடனும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். 2017ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
-
முடி கொட்டுதல் & வழுக்கை: தீர்வு என்ன?
19/06/2025 Duración: 08minஏன் முடி கொட்டுகிறது? வழுக்கை ஏற்படுகிறது? இதற்கு தீர்வு என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து சந்தித்து உரையாடியவர்: றைசெல். முதலில் பதிவான நாள்: 11 June 2018. இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பதை விரைவில் முடிவு செய்வோம் – அதிபர் Trump
19/06/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/06/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
செருப்புத் தைப்பவர் ‘குருஜி' ஆகிறார்
18/06/2025 Duración: 11minKulture Shock என்ற குழுவினர் சமூகப் பிரச்சனைகளுக்குக் கலை வடிவம் கொடுத்து வருகிறார்கள். அந்த அமைப்பின் அவினாஷ் தனபாலன் மற்றும் பவித்ரா நடராஜன் ஆகியோர், அவர்களின் முதல் படைப்பான, “Oh My Guruji” என்ற நாடகம் குறித்து, குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள்.
-
உலகில் வாழச் சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலிய நகரங்களுக்கு எந்த இடம்?
18/06/2025 Duración: 02minThe Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான most liveable cities - உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
தொழில் முனைவோரான ஒரு அகதியின் கதை!
18/06/2025 Duración: 11minஅகதிகள் வாரம் ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்து தற்போது தொழில் முனைவோராக வளர்ந்து வரும் செல்வேந்திரன் தனுஷாந்த் தனது வெற்றிக்கதையை பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: Great Ocean நெடுஞ்சாலை
18/06/2025 Duración: 10minGreat Ocean Road- என்று பலரும் அறிந்த நீண்ட பெரும் சாலை விக்டோரிய மாநிலத் தலைநகர் மெல்பர்னிலிருந்து 65 கிலோ மீட்டரில் உள்ள Torquay என்ற இடத்திலிருந்து தொடங்கி, 243 கி.மீ நீளம் கடந்து Allansford என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது. ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க மிக முக்கிய சாலையாக பார்க்கப்படும் Great Ocean Road எப்படி உருவானது, அதன் பாதையில் என்னென்ன சுவையான அம்சங்கள் உள்ளன என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் உயிர்மெய்யார்.
-
Albanese- Trump இடையிலான நேரடி சந்திப்பு ரத்து- பின்னணி என்ன?
18/06/2025 Duración: 06minG7 உச்சி மாநாடு கனடாவில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseயும் கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி
18/06/2025 Duración: 07minதமிழ்நாட்டில் ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்; கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்; ஈரான் - இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய அரசின் அறிவுறுத்தல்; இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தொடர்ந்து கைது செய்யப்படும் வங்கதேசிகள்; ஏர் இந்தியாவின் பல சர்வதேச விமானங்கள் ரத்து உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.