Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
செய்தியின் பின்னணி: மெல்பனில் இரு சிறுவர்கள் குத்திக்கொலை- பிந்திய தகவல்கள்
10/09/2025 Duración: 06minவார இறுதியில் மெல்பனின் மேற்கில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, gang crime-கும்பல் குற்றங்களை கையாள்வதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரங்கள் தேவையா என்பதை விசாரித்து வருவதாக விக்டோரிய Premier Jacinta Allan தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய-இந்திய சமூக தலைவர்களுடன் NSW மாநில அரசு உரையாடல்
10/09/2025 Duración: 02minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை தொடர்பில் ஐ,நா மனித உரிமை பேரவை கூறுவதென்ன?
09/09/2025 Duración: 06minஐ,நா மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
அமெரிக்காவுக்கு பொதி(parcel) அனுப்பும் சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள Australia Post
09/09/2025 Duración: 02minஅமெரிக்காவுக்கு பார்சல் - பொதிகளை அனுப்பும் சேவையை Australia Post மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஏன் “Ute” வாகனம் ஆஸ்திரேலியாவில் வடிவமைக்கப்பட்டது? Uteன் வரலாறு என்ன?
09/09/2025 Duración: 08minஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் சிறப்புகளில் “Ute” வாகனமும் ஒன்று. ஆஸ்திரேலியாவில்தான் இந்த Ute வாகனம் முதன் முதல் வடிவமைக்கப்பட்டது. அதன் வரலாற்றை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.
-
ஆஸ்திரேலியா–வனுவாட்டு இடையே புதிய பாதுகாப்பு பொருளாதார ஒப்பந்தம்!
09/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 09/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
கீதவாணி விருதுகள் - 2025
08/09/2025 Duración: 07minசிட்னி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்தும் கீதாவணி விருதுகள் 2025 நிகழ்ச்சி செப்டம்பர் 14 ஆம் தேதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் சிட்னி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரவி ராஜ் வேலுப்பிள்ளை அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
பிரமாண்டமான கர்நாடக இசை நிகழ்ச்சியில் தாள வாத்திய தனி ஆவர்த்தனம் இசையுடன் இணைகிறது
08/09/2025 Duración: 13minகுரு காரைக்குடி மணி அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி இசை நிகழ்ச்சி ஒன்றை ஸ்ருதி லய கேந்திரா, ஆஸ்திரேலியா என்ற அமைப்பின் சாய் சகோதரர்கள் வழங்க உள்ளார்கள். கர்நாடக தாள வாத்தியத்தில் புரட்சியை ஏற்படுத்திய, மிகச்சிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான காரைக்குடி மணி அவர்களை நினைவுகூரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியில் இரண்டு சிறப்புப் பிரிவுகள் உள்ளன, அத்துடன் இந்தத் தலைமுறையின் முன்னணி கலைஞர்களில் சிலராக பரவலாகக் கொண்டாடப்படும் முன்னணி இந்தியக் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளார்கள். காரைக்குடி மணி அவர்களின் நான்கு மூத்த சீடர்களைக் கொண்ட தாள நிகழ்ச்சியில் ஸ்ரீ சுந்தர்குமார், குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா, மற்றும் சாய் சகோதரர்கள் (சாய்-நிநேதன் & சாய்-சாரங்கன் ரவிசந்திரா) ஆகியோரும், குன்னக்குடி எம்.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் மாபெரும் கர்நாடக இசை நிகழ்ச்சியில் மைசூர் என்.கார்த்திக் (வயலின்), சாய் சகோதரர்கள் சாய்-நிநேதன் ரவிசந்திரா (சிட்னி), சாய்-சாரங்கன் ரவிசந்திரா (மெல்பன்), ஸ்ரீ சுந்தர்குமார் மிருதங்கமும் வாசிக்கவுள்ளார்கள். இது குறித்த மேலதிக விபரங்களை, குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா அவ
-
Centrelink சில கடன்களை தள்ளுபடி செய்கிறது!
08/09/2025 Duración: 07minஅரசு நலன்புரி கொடுப்பனவு பெறும் சுமார் 12 லட்சம் பேரின் $250 டாலர்கள் வரை உள்ள கடன்கள் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்துள்ளது. சுமார் $300 மில்லியன் அளவிலான தவறான கடன்களை வசூலிக்க முயற்சிக்கும் போது, அதன் நிர்வாகச் செலவுகள், வசூலிக்கப்படும் தொகையை விட அதிகமாக இருந்திருக்கும் என அரசு வாதிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
விக்டோரியாவில் மூவரைப் பலியெடுத்த நச்சுக் காளான்: Erin Patterson க்கு தண்டனை அறிவிப்பு
08/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
07/09/2025 Duración: 10minஇந்தியாவில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - வங்கதேசத்து பெண் உட்பட 12 பேர் கைது; நீரவ் மோடி, விஜய் மல்லையா நாடு கடத்தல் விவகாரம்: டெல்லி திஹார் சிறையை ஆய்வு செய்தது இங்கிலாந்து குழு; செங்கோட்டையன் பதவி பறிப்பு - எடப்பாடி பழனிசாமி அதிரடி; தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஆஸ்திரேலிய செனட்டர் ப்ரைஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஏன் இந்திய சமூகத் தலைவர்கள் கோருகின்றனர்?
06/09/2025 Duración: 05minஆஸ்திரேலிய எதிர்கட்சியான லிபரல் கட்சியை சார்ந்த பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்ட செனட்டர் Jacinta Nampijinpa Price அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி பின்னணி கொண்ட குடியேற்றவாசிகள் குறித்து தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை விளக்குகிறார் றைசெல்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
06/09/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (31 – 6 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 6 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
‘இன்று நாம் பின்பற்றும் நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாமே மனிதன் ஏற்படுத்தியவைதான் ’ – கார்டூனிஸ்ட் மதன்
05/09/2025 Duración: 18minமதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 4.
-
‘இணையத்திலிருந்து தகவல் சேகரித்து நான் “ஹாய் மதனில்” எழுதியதில்லை’ – கார்டூனிஸ்ட் மதன்
05/09/2025 Duración: 12minமதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 3.
-
ஆஸ்திரேலியர்களுக்கு வசந்த கால 'Thunderstorm ஆஸ்துமா' எச்சரிக்கை!
05/09/2025 Duración: 02minவசந்த காலத்தில் அதிக மழை காரணமாக 'thunderstorm ஆஸ்துமா' அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவா நிகழ்ச்சியில் பாட வருகிறார் பிரியா ஜெர்சன்!
05/09/2025 Duración: 10minஇசையமைப்பாளர் தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள பாடகர்களில் பிரியா ஜெர்சனும் ஒருவர். அவர் எமக்கு வழங்கிய நேர்காணல். அவருடன் உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
-
Home Care Packages: முதியோருக்கான வீட்டுப் பராமரிப்பு உதவியில் தாமதம்
05/09/2025 Duración: 08minHome Care Packages - இது Australia-வில் வயதானோருக்கான வாழ்வின் அடிப்படை ஆதரவாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய நிலவரத்தில் இந்த முக்கியமான உதவி பலருக்கும் வழங்கப்படுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பணியிடங்களில் Nurses - செவிலியர்கள் இனவெறியை எதிர்கொள்கிறார்கள் - ஆய்வு முடிவு
05/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 5/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
04/09/2025 Duración: 08minஅதிபர் அனுரகுமார திசநாயக்க இரு நாட்கள் பயணமாக வடபகுதிக்கு வருகை; மனித புதை குழிகளுக்கு நீதியும், சர்வதேச விசாரணை வேண்டியும் வடக்கு ,கிழக்கில் போராட்டங்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.