Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
விக்டோரியாவில் மூவரைப் பலியெடுத்த நச்சுக் காளான்: Erin Patterson க்கு தண்டனை அறிவிப்பு
08/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 08/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
07/09/2025 Duración: 10minஇந்தியாவில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - வங்கதேசத்து பெண் உட்பட 12 பேர் கைது; நீரவ் மோடி, விஜய் மல்லையா நாடு கடத்தல் விவகாரம்: டெல்லி திஹார் சிறையை ஆய்வு செய்தது இங்கிலாந்து குழு; செங்கோட்டையன் பதவி பறிப்பு - எடப்பாடி பழனிசாமி அதிரடி; தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஆஸ்திரேலிய செனட்டர் ப்ரைஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஏன் இந்திய சமூகத் தலைவர்கள் கோருகின்றனர்?
06/09/2025 Duración: 05minஆஸ்திரேலிய எதிர்கட்சியான லிபரல் கட்சியை சார்ந்த பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்ட செனட்டர் Jacinta Nampijinpa Price அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி பின்னணி கொண்ட குடியேற்றவாசிகள் குறித்து தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை விளக்குகிறார் றைசெல்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
06/09/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (31 – 6 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 6 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
‘இன்று நாம் பின்பற்றும் நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாமே மனிதன் ஏற்படுத்தியவைதான் ’ – கார்டூனிஸ்ட் மதன்
05/09/2025 Duración: 18minமதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 4.
-
‘இணையத்திலிருந்து தகவல் சேகரித்து நான் “ஹாய் மதனில்” எழுதியதில்லை’ – கார்டூனிஸ்ட் மதன்
05/09/2025 Duración: 12minமதன் அவர்கள் தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கார்டூனிஸ்ட். நகைச்சுவை சித்திரம், வரலாறு, தகவல், எழுத்து, திரைப்பட ஆய்வு என்று தொட்ட துறையிலெல்லாம் தனி முத்திரை பதித்தவர் அவர். மதன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் முன்பு (2010 ஆம் ஆண்டு) நமக்கு வழங்கிய நீண்ட நேர்முகத்தின் மறு பதிவு இது. பாகம் 3.
-
ஆஸ்திரேலியர்களுக்கு வசந்த கால 'Thunderstorm ஆஸ்துமா' எச்சரிக்கை!
05/09/2025 Duración: 02minவசந்த காலத்தில் அதிக மழை காரணமாக 'thunderstorm ஆஸ்துமா' அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவா நிகழ்ச்சியில் பாட வருகிறார் பிரியா ஜெர்சன்!
05/09/2025 Duración: 10minஇசையமைப்பாளர் தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள பாடகர்களில் பிரியா ஜெர்சனும் ஒருவர். அவர் எமக்கு வழங்கிய நேர்காணல். அவருடன் உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
-
Home Care Packages: முதியோருக்கான வீட்டுப் பராமரிப்பு உதவியில் தாமதம்
05/09/2025 Duración: 08minHome Care Packages - இது Australia-வில் வயதானோருக்கான வாழ்வின் அடிப்படை ஆதரவாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய நிலவரத்தில் இந்த முக்கியமான உதவி பலருக்கும் வழங்கப்படுவதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பணியிடங்களில் Nurses - செவிலியர்கள் இனவெறியை எதிர்கொள்கிறார்கள் - ஆய்வு முடிவு
05/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 5/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
04/09/2025 Duración: 08minஅதிபர் அனுரகுமார திசநாயக்க இரு நாட்கள் பயணமாக வடபகுதிக்கு வருகை; மனித புதை குழிகளுக்கு நீதியும், சர்வதேச விசாரணை வேண்டியும் வடக்கு ,கிழக்கில் போராட்டங்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
04/09/2025 Duración: 08minகாசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்; நெருக்கம் காட்டும் சீனா- இந்தியா- ரஷ்யா; சீனாவின் ராணுவ அணிவகுப்பு; சூடானில் நிலச்சரிவு; வெனிசுலாவிலிருந்து சென்ற படகின் மீது அமெரிக்கா தாக்குதல்; போர்த்துகல் கேபிள் கார் விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
தந்தை நமக்கு யார்? – சுகி.சிவம்
04/09/2025 Duración: 05minதமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான பேச்சாளரும், ஆன்மீகவாதியுமான சுகி.சிவம் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி வழியாக SBS தமிழ் நிகழ்ச்சிக்கு வழங்கிய “தந்தையர் தினம்” தொடர்பான கருத்துரை.
-
அயலகத் தமிழ் ஆசிரியரை உருவாக்கும் பேராசிரியர்
04/09/2025 Duración: 14minSRM பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுபவரும், தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பை இயக்கி வருபவருமான, பேராசிரியர் இல சுந்தரம் அவர்கள் 2015 ஆம் ஆண்டு சிட்னிக்கு வந்திருந்தபோது, அவரது செயற்பாடுகள் குறித்தும், மெல்பேர்ணில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை(Australian Tamil Academy)யுடன் இணைந்து அயலகத் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் கலந்துரையாடியிருந்தார். கலந்துரையாடலில் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் தலைவர் மு சுகுமாரனும் இணைந்து கொண்டார். அந்த கலந்துரையாடலின் மறு ஒலிபரப்பு இது.
-
நாட்டில் மருந்துகளின் விலை மேலும் குறைகிறது
04/09/2025 Duración: 09minநாடாளுமன்றம் நிறைவேற்றிய புதிய “Cheaper Medicines Bill 2025” சட்டத்தின் மூலம் PBS மருந்துகளுக்கான கட்டணம் 25 டொலர்களாகக் குறைக்கப்படுகிறது. அடுத்த வருடம் முதல் நாள் (2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல்) நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தின் மூலம், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மருந்து செலவு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
நவுருவில் 354 பேரை குடியேற்ற 2.5 பில்லியன் டொலர்கள் செலவிடவுள்ள ஆஸ்திரேலியா
04/09/2025 Duración: 02minஆஸ்திரேலியாவிலிருந்து நவுருவுக்கு நாடுகடத்தப்படுபவர்களின் மீள்குடியேற்றத்திற்கு சுமார் இரண்டரை பில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வீடுகளில் வாழும் 20,000 முதியவர்களுக்கு உடனடி உதவ அரசு நிதி ஒதுக்குகிறது
04/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 4/09/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
பூமராங்: தெரிந்ததும், தெரியாததும்
04/09/2025 Duración: 09minஆஸ்திரேலியாவின் தொன்ம அடையாளங்களுள் மிக முக்கியமானது பூமராங். பூமராங்கின் பிறப்பிடம் ஆஸ்திரேலியா என்பது நமக்கு பெருமை. ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தொன்மைக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கும் பூமராங் பற்றி நாம் இதுவரை அறிந்திராத பல தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
'It's a fraught experience just going out in public': The everyday toll of transphobia - 'பொது வெளியில் செல்வது ஒரு மோசமான அனுபவம்': திருநர்களின் அன்றாட அனுபவம்
03/09/2025 Duración: 07minTransgender people represent a small minority in our population, and while their visibility has increased, they've been the focus of charged legislative debates and online hate. - நமது மக்கள்தொகையில் திருநர்கள் ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினராக உள்ளனர், மேலும் அவர்களின் தெரிவு நிலை அதிகரித்துள்ள போதிலும், அவர்கள் கடுமையான சட்டமன்ற விவாதங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்பின் மையமாக இருந்து வருகின்றனர்.
-
மேற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கத் தயாராகும் AI கமராக்கள்
03/09/2025 Duración: 02minமேற்கு ஆஸ்திரேலியாவில் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு AI கமராக்கள் ஊடாக அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.