Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
The cervical screening test that could save your life - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான சோதனை!
03/09/2025 Duración: 09minCervical cancer is preventable, but only if you catch it early. Cultural and personal barriers have often meant that women avoid cervical cancer testing. But now with the help of a world-leading test, Australia is aiming to eliminate cervical cancer by 2035. The test is a safe and culturally sensitive option for women from all backgrounds. Best of all it could save your life—or that of someone close to you. - கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனைத் தடுக்க முடியும். ஆனால், கலாச்சார மற்றும் தனிப்பட்ட தடைகள் காரணமாக பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையைத் தவிர்க்கின்றனர் என்று தரவுகள் சொல்கின்றன. ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
What is forced marriage and what support is available in Australia? - கட்டாய திருமணத்தை எதிர்கொள்பவர்களுக்கு என்ன உதவி கிடைக்கிறது?
03/09/2025 Duración: 12minA forced marriage occurs when one or both individuals do not consent freely, often due to threats, coercion, deception, or if they are under 16 or those with mental incapacities. No matter how long you've been living here, it's vital to know: You have the right to choose who you marry. In this episode, we'll explore the difference between arranged and forced marriage and where you can turn for help if you or someone you know is affected. - நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ கட்டாயத் திருமணத்தினால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து விடுபட என்னென்ன உதவிகள் கிடைக்கின்றன என்பது தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியா ஏன் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை தடை செய்கிறது?
03/09/2025 Duración: 16minஈரானின் Islamic Revolutionary Guard Corps எனும் ஆயுத குழுவை தடை செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கூடவே, ஆஸ்திரேலியாவுக்கான ஈரான் தூதர் அஹ்மத் சதேகி ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த பரபரப்பான செய்தியின் பின்னணியில் இருக்கும் தகவல்களை தொகுத்தளிக்கிறார் உயிர்மெய்யார்.
-
வெளிநாட்டில் பிறந்த குற்றவாளிகளின் நாடுகடத்தல் - எதிர்க்கட்சி ஆதரவு
03/09/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 03/09/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கையில் என்ன நடக்கிறது?
02/09/2025 Duración: 06minவலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் மாற்றமில்லை: அரசு உறுதி
02/09/2025 Duración: 02minஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மாறாமல் பேணப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மீன் வடிவ Soy sauce குப்பிகளை தடை செய்த முதல் ஆஸ்திரேலிய மாநிலம்!
02/09/2025 Duración: 02minஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக மாநிலமொன்று மீன் வடிவ Soy sauce குப்பிகளை தடைசெய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
முதியோரை வீட்டிலேயே பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
02/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 02/09/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
குடியேற்றவாசிகளுக்கு எதிரான பேரணிகள்: ஏன் நடந்தன? என்ன சொல்லப்பட்டன?
01/09/2025 Duración: 10minஆஸ்திரேலியாவுக்குள் லட்சக் கணக்கில் குடியேற்றவாசிகளை அரசு அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் ஆஸ்திரேலிய நகரங்களில் கடந்த ஞாயிறு நடைபெற்றன. SBS Newsக்காக Sam Dover தயாரித்த விவரணத்தின் சாரத்தோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சிக்காக தயாரித்தவர் றைசெல்.
-
‘தமிழே என் தாய்' – ஜோ மல்லூரி
01/09/2025 Duración: 10minதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் முன்னெடுப்பில் September 21ஆம் தேதி சிட்னியில் நடக்கும் ‘இனிய இலக்கிய சந்திப்பு' என்ற நிகழ்ச்சியில் ‘தமிழே தவம்' என்ற தலைப்பிலே பேச வருகிறார், திரைப்படக் கலைஞர், இலக்கியவாதி, சொற்பொழிவாளர், புகைப்படக் கலைஞர், குறும்பட இயக்குனர், கலை இயக்குனர், வெளியீட்டாளர், இசையமைப்பாளர் என்று பன்முகம் கொண்ட ஜோ மல்லூரி அவர்கள். அவரைத் தொலைபேசி வழியாக நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
சர்ச்சையைக் கிளப்பியுள்ள, ‘வெளிநாடுகளில் பிறந்தவர்கள் நாடுகடத்தப்படுதல் குறித்த சட்டம்’
01/09/2025 Duración: 07min‘வெளிநாடுகளில் பிறந்தவர்கள் நாடுகடத்தப்படுதல்’ குறித்து அரசு அறிமுகப்படுத்திய சட்டம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள அதே நேரம், அவர்களை நாடு கடத்துவதற்கு 400 மில்லியன் டொலர்களுக்கு நவ்ரூ தீவுடன் ஒரு ஒப்பந்தத்தை அரசு கடந்த வாரம் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய தெருக்களில் மோதல்கள்: குடியேற்றம் குறித்த பேரணிகள் நாட்டைப் பிளவுபடுத்துகின்றன
01/09/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/09/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
31/08/2025 Duración: 10minஇந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன பயணம் - சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு : இரு நாட்டு உறவில் மாற்றம் நிகழுமா? “மரங்களோடு பேசுவோம்” மாநாடு - சீமானின் அதிரடி பேச்சு; ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை! மோதல் முடிவுக்கு வந்ததா?; தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
30/08/2025 Duración: 06minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (24 – 30 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 30 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
நியூசிலாந்தில் குடியேறுவதற்கான புதிய விசா அறிமுகம்!
29/08/2025 Duración: 02minநியூசிலாந்தில் குடியேறுவதற்கான புதிய விசா ஒன்றை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
'காலத்துக்கேற்ப என்னை மாத்திட்டேன்': Super Singer பாடகர் அஜய் கிருஷ்ணா
29/08/2025 Duración: 15minஇசையமைப்பாளர் 'தேனிசைத்தென்றல்' தேவா அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இசைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள பாடகர் அஜய் கிருஷ்ணா எமக்கு வழங்கிய நேர்காணல். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். Music Director 'Thenisai Thendral' Deva will be visiting Australia on a musical tour. As part of the events, singer Ajay Krishna, who will be performing, having a conversation with Praba Maheswaran.
-
Penalty Rates, Overtime ratesஐ பாதுகாக்கும் சட்டம் நிறைவேறியது
29/08/2025 Duración: 06minஆஸ்திரேலிய அரசு இந்த வாரம் Penalty Rates Billஐ சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இது ஊழியர்களின் penalty rates, overtime rates போன்ற உரிமைகளை சட்ட ரீதியாக பாதுகாக்கும் ஒரு முயற்சி எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
‘நாட்டின் பெரும்பகுதி வெப்பமான, ஈரமான, காட்டுத்தீ அபாயம் கொண்ட வசந்த காலம்’ – வானிலை ஆய்வு மையம்
29/08/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 29/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இரண்டு போலீசாரை சுட்டுக் கொன்ற Freeman சார்ந்த “இறையாண்மை குடிமக்கள்” என்பவர்களின் கொள்கைகள் என்ன?
28/08/2025 Duración: 09minவிக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்படும் Dezi Freeman எனபவர் Sovereign Citizens - ‘இறையாண்மையுடைய குடிமக்கள்’ எனும் கொள்கையை கடைபிடிப்பவர் என்றும், இது தீவிர விளிம்பு நிலை குழு என்றும் கருதப்படுகிறது. இந்த பின்னணியில் Sovereign Citizens பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
28/08/2025 Duración: 08minஇலங்கையில் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டார்; மீண்டும் ஆரம்பமான யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணியில் தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.